திருச்சியில் இருந்து குளித்தலை செல்லும் வழியில் கோவிலூர் என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரில் வேளாண் விளைநிலங்களுக்கு அருகில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் இந்த சுரங்கப்பாதையை பள்ளி குழந்தைகள் உட்பட 1500 பேர் கடக்கின்றனர்.

தற்போதைய சூழலில் கோவிலூரை அணுக இருக்கும் ஒரே வழியாக இந்த சுரங்கப்பாதையே உள்ள நிலையில், பேருந்து கூட செல்லமுடியாத நிலையில் இந்த சுரங்கப்பாதையின் உயரம் அமைந்துள்ளது. மேலும் பணிகள் முழுதாக முடிக்கப்படாத சூழலில் மழை பெய்யும் நாட்களில் மூன்று அடி உயரத்திற்கு நீர் தேங்கி நிற்கும் அவலமும் உள்ளது.

தினசரி 1500க்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கும் இந்த சுரங்கப்பாதை வழியாக தான் விவசாய விலை பொருட்களான நெல், வைக்கோல், வாழை போன்றவற்றை செல்ல வேண்டும், ஆனால் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே செல்லும் வகையில் இருக்கும் இந்த பாதை வழியே பெரிய வாகனங்கள் செல்ல முடிவதில்லை.

குறிப்பாக விவசாய இயந்திரங்கள், தீயணைப்பு மீட்பு வாகனங்கள் மற்றும் அவசர, பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய கனரக மீட்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் தான் உள்ளது. சுரங்கப்பாதையை ஆழப்படுத்துவதில் சிக்கல் உள்ள நிலையில், கோவிலூர் வழியே எலமனூர் செல்வதற்கு சாலை வசதி அமைத்துத்தர வேண்டும் அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments