மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை 9.30 மணி அளவில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இருந்து மதுரை வரை சமத்துவ நடைபயணத்தை நடத்த இருக்கிறார். இந்நிகழ்வை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில் மதிமுக அழைப்பிதழில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதல் மொய்தீன் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோர் பெயர்கள் அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது.
அழைப்பிதழில் பிரபாகரன் படம் அச்சிடப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துள்ளனர். முக்கியமாக செல்வப் பெருந்தகை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என முதல்வரிடம் நேரில் சந்தித்து கூறிவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் உள்ள நிர்வாகிகள் யாரும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை அவர்கள் அனைவரும் புறக்கணித்துள்ளளோம்
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments