காங்கிரஸ் கட்சி சின்னத்தை சொல்ல முடியாத நிலைமையை உருவாக்கியவர்கள் தலைவர்களில் பெயரில் உள்ள சில தற்குறிகள் என காங்கிரஸ்  வேலுச்சாமி கடுமையான விமர்சனம் 

காங்கிரஸ் கட்சி சின்னத்தை சொல்ல முடியாத நிலைமையை உருவாக்கியவர்கள் தலைவர்களில் பெயரில் உள்ள சில தற்குறிகள் என காங்கிரஸ்  வேலுச்சாமி கடுமையான விமர்சனம் 

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியிலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட ஒதுக்கீடு செய்யவில்லை.  இதை கண்டித்து மாநில பொது செயலாளர் சரவணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பின்னர் காங்கிரஸ் கமிட்டியின் மாநில பேச்சாளர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்... கடைசி முதல்வராக இருந்தவர் பக்தவட்சலம் இதில் காமராஜரை தவிர அனைவருக்கும் குடும்பம், பிள்ளை  இருந்தன.

ஆனால் தேர்தல் காலங்களில் அவர்கள் பிள்ளைகளுக்காக சீட்டு கேட்கவில்லை, தேர்தலில் நிற்கவில்லை. இப்படி துரதிஷ்டமான நிலைமை காங்கிரஸின் கட்சிக்கு வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. 1967 இல் மிகப்பெரிய தமிழகத்தில்  திருநெல்வேலியில் தான் 18 தொகுதிலும்  வெற்றி பெற்றது. அதற்கு அடுத்து அதிக சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று திருச்சி மாவட்டத்தில் தான். அந்த திருச்சி மாவட்டத்தில் இன்றைக்கு ஒட்டு மொத்தமான திருச்சி மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட காங்கிரஸ் கட்சி போட்டியிடாத நிலைமை இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு பின்னால் இன்று வரை இதுதான் முதல் முறை. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஜீரணிக்க முடியவில்லை.

பேசுவதற்காக பேச்சுவார்த்தைக்காக போகிறவர்கள் தமிழ் நாட்டின் பூர்வீக அமைப்பை தெரிந்தவர்களாக   என்று எனக்கு புரியவில்லை. தமிழின வரலாற்றில் கஜா புயல் ஒன்று தான் மிக மோசமான புயலே அடித்தது. அந்த கஜா புயல் வேதாரண்யம், அதிராம்பட்டிணத்தில் தொடங்கி கொடைக்கானல் வரை அடித்து விட்டு போனதற்கு இடையே இன்றைக்கு ஏற்பட்டுள்ள அரசியல் புயலில் அதையும் தாண்டி குமரி வரை புயல் அடித்து  காங்கிரஸ் கட்சியினர் அழித்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம். நாங்கள் தலைமை உத்தரவை செயல்படுத்துகின்ற செயல்வீரர்கள் தான். ஆனால் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கின்றோம். தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கின்ற  கடைக்கோடி தொண்டன் என்று நினைக்கின்றவன் அன்றைக்கு காமராஜருக்கு புரிந்தது என்ன சொல்கின்றான் என்று காமராஜருக்கு புரிந்தது. இன்றைக்கு தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது என்பதை  டெல்லி தலைமை புரிந்து கொண்டு இந்த கட்டத்திலாவது இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லாமல் இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் மூலமாக நாங்கள் இதை உணர்த்துகின்றோம். இது கட்சி விரோதமாக அல்ல. எங்களுக்கு இது மிக நன்றாக புரிகின்றது எங்களுக்கு புரிவது தலைவருக்குப் புரியவில்லை.

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு புறம்பாக பாசித்ததுக்கு  ஆதாரமாக உள்ள பாரதிய ஜனதா கட்சி அதனுடைய கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க கூட காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சூடான டீ கூட குடிக்க கூட தயங்குகிறார்கள். இதை வைத்துக்கொண்டு எப்படி வியாபாரம் செய்ய நினைக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கையில் இந்த கட்சியை உண்மையாக நேசிக்கின்ற இருக்கிறவர்கள் நெஞ்சம் கொதித்து கொண்டிருக்கின்றது. அந்த நிலையில் தான் எங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.இது மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்த நிலைமையில் ஆவது  புரிந்து கொண்டு இதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றோம். மேலும், திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி கூட காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி சின்னத்தை சொல்வதற்கே வழி இல்லாத இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமையை உருவாக்கியவர்கள் தலைவர்களில் பெயர்களில் உள்ள சில தர்குறிகள், சுயநலவாதிகள் அவர்களின் போக்கை கண்டிக்கிறோம் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I