கீழ தேவதானம் பகுதியில், UDV மைதானம் அருகே நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமானப் பணியால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மாற்றுப் பாதைகள் சரியாக அமைக்கப்படாததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, அவசர கால ஊர்திகள் செல்வதிலும், பள்ளி மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு அதிக காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments