Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இந்தியத் தகவல் தொழில் நுட்பக்கழகத்தின் திருச்சி வளாக கட்டடப்பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும்

இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சி வளாகத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவில் கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering) மற்றும் மின்னணு – தகவல் தொடர்பு பொறியியல் (Electronics and Communication Engineering) ஆகிய துறைகள் உள்ளன. இவை மட்டுமின்றி பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன.

ஜூலை 31-ம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கணினி அறிவியல் பொறியியல் துறையில் 25 பேரும், மின்னணு – தகவல் தொடர்பு பொறியியல் துறையில் 21 பேரும் பட்டம் பெறவுள்ளனர். பட்டமளிப்பு விழாவுக்குத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், கல்லூரியின் ஆளுநர் குழுவின் தலைவருமான இறையன்பு தலைமை வகிக்கிறார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், ஆக்சிலர் வென்ச்சர்ஸ் நிறுவனர் – தலைவருமான சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார்.

ரூ.128 கோடி செலவில் கல்லூரிக்குச் சொந்தக் கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து கல்லூரி முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும். திருச்சி சேதுராப்பட்டி 56 ஏக்கரில் ரூபாய் 128 கோடியில் இந்திய தகவல் தொழில்நுட்ப கழக பணி தொடங்கப்பட்டது. 

மத்திய அரசு 50 சதவீதம் மாநில அரசு 35 சதவீதம் பங்குதாரர்களின் பங்களிப்பாக 15 சதவீத நிதியில் நடைபெறும் பணிகள்
கொரோனா காலகட்டத்தில் பணிகள் தாமதப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து உள்கட்டமைப்பு பணிகள்   நிறைவடையும் நிலையில் உள்ளது. என்று ஐஐஐடி திருச்சி இயக்குனர் என்.வி.எஸ்.என். சர்மா தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்… கல்லூரியில் இணையவழிச் சான்றிதழ் பயிற்சி, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகளை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளைத் தொடங்கத் திட்டமிட்டு வருகிறோம். கல்லூரியில் தற்போதுள்ள 2 இளநிலைப் பாடப் பிரிவுகளில் தற்போது தலா 30 ஆக உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைத் தலா 60 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட 16 பேராசிரியர் பணியிடங்களில் தற்போது 13 பேர் பணியில் உள்ளனர். மேலும், தேவைக்கேற்ப 11 பேரைப் பணி நியமனம் செய்ய ஆளுநர் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப இவர்கள் பணியமர்த்தப்படுவர். சிறந்த கல்வி நிலையங்களில் சிறந்த முறையில் பிஎச்டி முடித்தவர்களை மட்டுமே பணியமர்த்தி வருகிறோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *