Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

பரவும் மஞ்சள் காமாலை: சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் உள்ள சோழராஜபுரம், பாக்குபேட்டை மற்றும் சாலை ரோடு பகுதிகளில் சில நாட்களாக பொதுமக்களில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

சில நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் பலருக்கு மஞ்சள் காமாலை இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது.

இதனால், அவர்கள் சிகிச்சை எடுக்கத் தொடங்கினர். சோழராஜ புரத்தில் இருந்து மட்டும் நேற்று ஒரேநாளில் 10க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலைக்கு மருந்து சாப்பிட வேன் வைத்து புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி சென்றுள்ளனர்.

இப்பகுதியில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றத்துடன் சப்ளையாகும் தண்ணீர் மஞ்சள் காமாலை பரவலுக்கு காரணம் எனபொதுமக்கள் மாநகராட்சி அலுவவர்களிடம் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பாக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதோடு, மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. இப்பகுதிகனில் வரும் குடிநீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 

பல இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருவதால், ஏதாவது இடத்தில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதா என்று தெரியவில்லை . இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் 

 டாக்டர் மணிவண்ணனிடம் கேட்ட போது,” உறையூர் மக்களிடம் இருந்து புகார் வந்தது. குழுக்கள் அமைக்கப்பட்டு, முகாம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்கனவே மஞ்சல்காமாலை இருந்து. சரியாகவிட்டது எனபலர் கூறியுள்ளனர். எனினும், புகார் வந்த பகுதிகளில் வீடு, வீடாக சென்று, மஞ்சள் காமாலை நோய் அறிகுறி உள்ளதா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட முகாம். ஆய்வுகளின் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இல்லை

 மக்களாகவே தங்களுக்கு இருக்குமோ என்ற பயத்தில் சிகிச்சைகளை எடுக்கின்றனர். இப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

உறையூர் பகுதி காவல் நிலையம் அருகில் உள்ள தண்ணீர் தேக்க தொட்டிய குழாயில் இருந்து வந்த தண்ணீரில் அசுத்தமாக உள்ளது. தொட்டியை கழுவுவது இல்லை தூய்மையற்ற நீரால் மஞ்சகாமாலை பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மாநகராட்சி விரைந்து இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *