ஹவுரங்காபாத்திலிருந்து கந்தர்வகோட்டையில் உள்ள தனியார் பீர் கம்பெனிக்கு காலியான பீர் பாடல்களை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி காட்டூர் கைலாஷ் நகர் அருகே வந்த பொழுது வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வைத்துள்ள பேரிகார்ட் பகுதியில் திரும்பும்போது லாரி டிரைவர் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் சாலை ஓரம் இருந்த டீக்கடையை மோதியது.
அப்போது அந்த பகுதியில் நின்ற இரண்டு ஐகான் கார் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. மேலும் அந்தப் பகுதியிலிருந்து இருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் மோதி மின் கம்பம் சாய்ந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்தது அதிகாலை என்பதால் உயிர் சேதம் எதுவும் இல்லை. லாரி டிரைவர் யாதவ் (55 ) சிறு காயத்துடன் அவரும் அதிர்ஷ்டவசமாக உரிய தப்பினார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு உடனடியாக லாரியை அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் லாரி மோதி விபத்துக்குள்ளானதால் அரியமங்கலத்தில் இருந்து திருவெறும்பூர் வரை மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments