சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மாணிக்கம்பிள்ளைசத்திரம் என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நான்கு வழிச் சாலையில் சென்டர் மீடியனை தாண்டி எதிர்பக்க சாலைக்கு சென்ற நிலையில் எதிரே கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மீது லாரி மோதியது.
இதில் லாரி ஓட்டுனர் திருவண்ணாமலை மாவட்டம், அமளூரைச் சேர்ந்த முருகன் (40). பேருந்து ஓட்டுனர் ரவிச்சந்திரன் (56), நடத்துனர் மாயாவி (35) மற்றும் பேருந்தில் பயணம் செய்த சதீஷ்குமார், இவரது மனைவி பானு, மருதுபாண்டி, ராணி, உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.
படுகாயமடைந்த லாரி ஓட்டுனர் முருகன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்வர்கள் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments