திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திங்கட்கிழமை எரிந்து நாசமடைந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.மணப்பாறை அடுத்த வையம்பட்டி சந்தைபேட்டையில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் முருகப்பன் மகன் மோகன்ராஜ். இவர் தனது காரில் திங்கட்கிழமை மாலை வையம்பட்டியிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் கண்ணுடையான்பட்டி பிரிவு அருகே வந்தபோது திடீரென காரிலிருந்து புகை வந்துள்ளது.


மோகன்ராஜ் கீழே இறங்கி பார்த்தபோது கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, மோகன்ராஜ் அளித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத்துறை தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீஸார் விசாரித்து வருகின்றனர். நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததால் சுமார் 40 நிமிடங்கள் நெடுஞ்சாலை போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments