திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு கட்டுப்பாட்டில் உள்ளது யாத்ரி நிவாஸ். இங்கு வெளியூரில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் தங்குவதற்கு குறைந்த கட்டணத்தில் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இங்கு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே திருச்சி லால்குடி அன்பில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் பிளம்பர் வேலையை ஒப்பந்த ஊழியராக செய்து வந்தார். இன்று (24.05.2022) வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது இரும்பு ஏணியை எடுத்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது அங்கு இருந்த மின்சார கம்பியில் உரசியது. இதில் ஏணியை பிடித்திருந்த மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்தது.
உடனடியாக அவரை மீட்டு சக ஊழியர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மணிகண்டனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments