Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறை வழக்கறிஞர்கள் சங்கத்தில் மாறி மாறி உறுப்பினர்களை நீக்கி சர்ச்சை

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் சங்கத்தில் 228 பதிவு செய்த வழக்கறிஞர்கள் உள்ளனர். இதில் இரண்டு முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவராக செயல்பட்டு வருபவர் ஜி.மோகன்தாஸ். நிகழாண்டு சங்கத்தில் துணைத்தலைவராக எஸ்.வள்ளிக்கண்ணு, செயலராக சி.மகேந்திரன், பொருளாளராக பி.சரவணன்,

 இணைச்செயலராக பி.ஜெயவீரபாண்டியன், நுலகராக பி.பால்ராஜ் ஆகிய வழக்கறிஞர்கள் பதவி வகித்து வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களாக வழக்கறிஞர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், வாட்ஸஅப் குழுக்களில் கருத்து மோதல் நடந்துள்ளது. அப்போது சங்க தலைவர் ஜி.மோகன்தாஸ் சங்க மாண்பையும், ஒற்றுமையும் சீர்குலைக்கும் வகையில் பதிவுகளிட்டதாக கூறிப்படுகிறது. இதுகுறித்து சனிக்கிழமை சங்கத்துணைத் தலைவர் எஸ்.வள்ளிக்கண்ணு தலைமையில், செயலர் சி.மகேந்திரன், பொருளாளர் பி.சரவணன், இணைச்செயலர் பி.ஜெயவீரபாண்டியன், நுலகர் பி.பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் நடைபெற்ற அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் ஜி.மோகன்தாஸை சங்கத்தின் தலைவர்

 பொறுப்பிலிருந்து முழுமையாக விடுவித்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டனர். அதேபோல், சங்க தலைவர் ஜி.மோகன்தாஸ், அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சங்க சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகக் கூறி சங்கத்துணைத் தலைவர் எஸ்.வள்ளிக்கண்ணு, இணைச்செயலர் பி.ஜெயவீரபாண்டியன், மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் மற்றும் உ.விஜய்,

 அன்பழகன் ஆகிய வழக்கறிஞர்களை நிரந்தரமாக நீக்கப்பட்டதாகவும், டி.ஐ.ஜியுடன் வழக்கறிஞர்கள் சந்தித்து சுமூகமான நல்லுறவை ஏற்படுத்துவது எனவும், திங்கள்கிழமை மார்ச் 3-ஆம் தேதி நடைபெறும் தேர்வில் தளர்வு செய்யப்பட்ட விதிகளுடன் நீக்கம் செய்யப்பட்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் போட்டியிடலாம், தேர்தெடுக்கப்படுவார்கள் என்றும் தீர்மானங்கள் இயற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கறிஞர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி பதவிகளை நீக்கி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக வெளியிட்டுள்ள தகவல்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *