திருச்சி HAPP ஊழியருக்கு கொரோனா! அங்கு நடப்பது என்ன? சிறப்பு அலசல்!
தற்போது நிலவும் இந்த பொதுமுடக்க காலகட்டத்தில் பாதுகாப்புத் துறையையும் விட்டுவைக்கவில்லை கொரோனா வைரஸ்!சமீபத்தில் திருச்சியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்பு துறை நிறுவனமான HAPP ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள HAPP (ஹெவி அலாய் பெனட்ரேட்டர்) குடியிருப்பில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர் ஒருவருக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து HAPP குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதோடு அந்த பகுதி தடை செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள இந்தக் HAPP நிறுவனத்தில் சுமார் 950 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்த நிலையில் மிஷின் ஷாப் பிரிவில் வேலைப்பார்த்த ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் 50 சதவீத ஊழியர்கள் வந்த நிலையில் தற்போது ஒரு பிரிவுக்கு ஏழு நபர்கள் மட்டும் இருப்பதாக தெரியவருகிறது. மற்றவர்கள் வேலைக்கு செல்ல அச்சமடைந்து வீட்டிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேலும் இவர் HAPP ஊழியராக இருப்பதால் தொழிற்சாலையை மூடுவதற்கு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர் வசிக்கும் பூலாங்குடி காலனி பகுதி தனிமைப்படுத்தப்பட்டதோடு, அங்கு இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் திருச்சி பொன்மலை பகுதியில் அண்மையில் நடந்த ஒரு திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார் என்பதும் அந்த விழாவில் சென்னையிலிருந்து 10 பேர் வந்து இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. அதன் மூலம் இவருக்கு கொரனோ தோற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு சென்று கலந்து கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
HAPP பொது மேலாளர் உத்தரவின்பேரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிஷின் ஷாப் பிரிவில் வேலை செய்த ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.நாட்டின் முக்கிய பாதுகாப்பு நிறுவனத்திற்கு இந்த நிலைமை என்றால் மக்கள் அனைவரும் உரிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.