Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – முகக்கவசம் அணிய ஆட்சியர் வேண்டுகோள்!!

Advertisement

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் பிஎஸ்சி இயற்பியல் படிக்கும் காட்டூர் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவருக்கும், வரலாறு துறை படிக்கும் மூன்று மாணவர்களுக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் சளி என கொரோனா அறிகுறி இருந்துள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து கல்லூரி மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோலவே ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 15 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேற்று ஆய்வு செய்தார். இனாம் குளத்தூர் பகுதியில் கல்லூரி மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது சக மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மாவட்ட நிர்வாகத்திற்கு மத்தியில் பெரும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான தேர்தல் பணிகளுக்கு மத்தியில் இதையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில்… முககவசங்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும், முககவசங்கள் அணியாததன் விளைவை பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *