திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று கொரோனா தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கபட்டுள்ளார். இன்று உயிரிழப்பு இல்லை என்பது சற்று ஆறுதல். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0 எண்ணிக்கையில் உள்ளது.
திருச்சி திருவெறும்பூரில் ஒருவருக்கு மட்டும் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். திருச்சி மாவட்டத்தில் பிற பகுதிகளில் பாதிப்பு 0 எண்ணிக்கையிலேயே உள்ளது. மேலும் இதுவரை தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 94946, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93783, இறந்தவர்களின் எண்ணிக்கை 1161 ஆகும்.
பொதுமக்கள் அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக மக்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை நாம் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் மிகுந்த அலட்சியபோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் இதனால் மீண்டும் தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்கள் அலட்சியப்போக்கு தவிர்த்து பாதுகாப்பாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments