Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொரோனா தொற்று 3வது அலை திருச்சியில் அதிகமாகி வருகிறது – மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் உழவர் சந்தை மைதானத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டும் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்போம் என பொதுமக்கள் அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு…. முதல் அலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தார்கள். இரண்டாவது அலை தொற்று குறைய குறைய பொது மக்கள் முககவசம் அணிவது குறைந்துள்ளது. நேற்று ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் ஆடி இரண்டாவது வெள்ளி என்பதால் அதிக அளவில் கூட்டம் கூடியது.

திருச்சி மாவட்டத்தில் ஐந்து கோவில்களில் ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை அன்று பொதுமக்கள் தரிசனம் கிடையாது. ஆகம விதிகளின்படி பூசாரிகள் பூஜை மற்றும் செய்வார்கள். அதேபோன்று ஆடி பெருக்கு அன்று காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மூன்றாவது அலை துவக்கம் ஆகியுள்ளது திருச்சி மாவட்டத்தில் குறைந்துள்ள தொற்று தற்போது அதிகமாகி உள்ளது.

இது மேலும் உயராமல் இருக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி இருக்க வேண்டும்.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இல்லாமல் இருந்தால் கொறனாவை குறைக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. மாவட்டத்தில் 30 லட்சம் மக்கள் தொகையில் 21.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் இரண்டாவது தவணை தடுப்பூசி 8.8 லட்சம் பேருக்கு போடப்பட்டு உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 7.20 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது. 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டால் 50 சதவீதம் பேரை கவர் செய்துவிடலாம்.

தடுப்பூசி சிறந்த மருந்து. வணிக நிறுவனங்களில் அதிக அளவில் கூட்டம் கூடினால் அந்த கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். துறையூரில் சிறுத்தை புலி தாக்குதல் தொடர்பாக ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தீயணைப்பு துறையினர் வனத்துறையினர் இருக்கின்றனர் மேலும் சிறுத்தையை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் இல்லையெனில் காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *