கொரானாவில் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த திருச்சி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு
திருச்சியை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் உடல் உபாதைகள் காரணமாக பாண்டிச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைக்கு முந்தைய தினம் அவர் உடல்நிலைசிகிச்சை பலனின்றி இறந்த போது அவருக்கு கொரானா தொற்று இருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே அவரது உடலை அடக்கம் செய்வதற்காக பாண்டிச்சேரியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகத்திடம் கேட்டதற்கிணங்க உடலை பெற்ற உலக சுகாதார நிறுவனத்தில் வழிகாட்டுதல் அடிப்படையில் முறையான பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி திருச்சியில் செயல்பட்டு வரும் பிரண்ட் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் அவர்களுடைய அவர்களின் மத வழக்கப்படி அவருக்கு மரியாதை செலுத்திய பிறகு சுப்ரமணியபுரம் ஜெயாலானியா பள்ளிவாசலில் அடக்கம் செய்தனர். இதுகுறித்து அமைப்பின் மாவட்ட செயலாளர் முஜிப் ரகுமான் இடம் கேட்டறிந்த போது,பாண்டிச்சேரியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் இந்நிகழ்வைக் கேள்விப்பட்ட உடன் எங்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திருச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டு அவரின் உடலை பத்திரமாக கொண்டு வந்து செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் அவருக்கு செலுத்த வேண்டிய மரியாதையையூம் செலுத்தி அதேநேரத்தில் அரசு விதித்துள்ள அத்தனை கட்டுப்பாடுகளையும் பின்பற்றி நல்லடக்கம் செய்துள்ளோம் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu