Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கூடுதலாக 3 கல்லூரிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள்

No image available

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, சத்துணவுத் துறை, சமூகநலத் துறை, காவல் துறை மற்றும் போக்குவரத்து துறைகளில் உள்ள அனைத்து நிலை ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்…. நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி திருவிழாவில் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து நிலை ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர் ஆகிய வட்டங்களில் நோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார மருத்துவர்கள், வட்டார மேற்பார்வையாளர் ஆய்வு செய்து வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுத்து கொண்டு வரவேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்களில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும், தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேரு மெமோரியல் கல்லூரியிலும், குறிஞ்சி பொறியியல் கல்லூரியிலும், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *