திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 14 ஆயிரத்து 932 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 14 ஆயிரத்து 745 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 183 பேர் இறந்துள்ளனர்.56 பேர் தற்போது தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 45 முதல் 59 வயதுவரை உள்ள நீரிழிவு,ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆண், பெண்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து இன்று முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பொது, மருத்துவமனைகள் வட்டார, ஆரம்ப சுகாதார மையங்களில் இலவசமாகவும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் அரசு நிர்ணயம் செய்த ரூபாய் 250 செலுத்தியும் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்கள் தங்கள் ஒட்டுநர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட போட்டோவுடன் கூடிய ஆவணங்களை கொண்டுவருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Advertisement
இது குறித்து பேட்டியளித்த மருத்துவக் கல்லூரி டீன் வனிதா….28 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விண்ணப்பம் செய்திருந்த நிலையில் 50 சதவீத பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்ட யாருக்கும் எவ்வித எதிர்வினையும் ஏற்படவில்லை. ஒரிவருக்கு மட்டுமே சிறு ஒவ்வாமை ஏற்பட்டது. எனவே அனைவரும் பயமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           167
167                           
 
 
 
 
 
 
 
 

 02 March, 2021
 02 March, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments