திருச்சி மத்திய சிறையில் தண்டனை மற்றும் கைதிகள் விசாரணை கைதிகள் என 1300 அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளுக்கு கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இரண்டாவது அலை போல் வேகமாக பரவி வருகிறது.

இதனால் சிறைக் கைதிகளிடம் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் நேற்று முதல் கட்டமாக தண்டனை கைதிகள் 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 400 பேர் உள்ள நிலையில் அடுத்த கட்டமாக மற்ற கைதிகளுக்கும் படிப்படியாக விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட உள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81







Comments