துபாயில் இருந்து திருச்சி வருகைதந்த 113 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை!

துபாயில் இருந்து திருச்சி வருகைதந்த 113 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை!

திருச்சி விமான நிலையத்தில் துபாய் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகை புரிந்த 113 பயணிகளுக்கு பரிசோதனை செய்து கையில் சீல் வைக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று துபாய் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 113 பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலின்படி,சுகாதாரத் துறையினர் மூலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் எவருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. விமானம் மூலம் வருகை புரிந்த பயணிகளை அந்தந்த மாவட்டங்களுக்கு சிறப்பு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்‌.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டார்‌. மேலும் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், துணை இயக்குனர் டாக்டர் சுப்ரமணி, திருச்சி கிழக்கு வட்டாட்சியர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.