தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்ஆணையின்படி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அவர்களின் அறிவுரையின்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் “மக்களைத்தேடி மாநகராட்சி” குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமையன்று நடைபெற உள்ளது.
“மக்களைத்தேடி மாநகராட்சி” குறை தீர்க்கும் முகாம் வருகின்ற 30.08.2022ம் தேதி அன்று மண்டலம் எண்:2 (பாலக்கரை மீனாட்சி திருமணமண்டபம்)ல் நடைபெற உள்ளது. இம்மண்டல அலுவலகத்திற்குட்பட்ட 13 வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக இக்குறைதீர்க்கும் முகாமில் அளித்து பயன் பெறலாம்.
மேலும் அடுத்து வரும் மாதங்களில் கீழ்கண்டவாறுகுறைதீர்க்கும் நாள் நடைபெறும் இடங்கள்.
மண்டலம் -3 (திருவெறும்பூர் |ஜெகநாதபுரம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி வளாகம்) செப்டம்பர் 28
மண்டலம்-4(பொன்மலை கோட்ட அலுவலகம்)அக்டோபர் – 26
மண்டலம் -5 | (கோ.அபிசேகபுரம் கோட்ட அலுவலகம்)நவம்பர் – 30எனவே அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி குறைதீர்க்கும் முகாமில் அளித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments