திருச்சி திருவெறும்பூர் பகுதி பாலாஜி நகரில் பாதாள சாக்கடை குழாய் பணி பாதியிலேயே விட்டுச்சென்றுள்ளதாக மாநகராட்சி மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியி வசிக்கும் ராஜேந்திரன் கூறுகையில்… மாநகராட்சியில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணி 2019ல் தொடங்கியது . பணிகள் நிறைவடைவதற்கு முன்பே திடீரென்று நிறுத்தப்பட்டது நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த வேலையும் இங்கு நடக்கவில்லை.
மழைக்காலம் துவங்குவதால், நலசங்க நண்பர்கள் சேர்ந்து வீட்டிற்கு ரூ. 500 வீதம் வசூல் செய்து கப்பி நிரப்பி தற்காலிகமாக சாலையை சீரமைத்து பயன்படுத்தினோம். சரி செய்த இரு வாரங்களுக்குள் SCCL பணியாளர் வந்து 22 – 21 தெருக்களுக்கு இடையே குழி தோண்டி உபயோகிக்க முடியாதபடி பாழ்படுத்தி விட்டு பாதியிலேயே விட்டு சென்றுவிட்டனர்.
எந்த மாற்று வழியும் இல்லாமல் 21 ம் தெருவுக்கு மேல் இருப்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளோம். இன்று SCCL ஊழியர்களிடம் கேட்ட போது அவர்கள் பொறுப்பற்ற முறையில் எதுவாக இருப்பினும் மாநகராட்சியிடம் புகார் அளித்து கொள்ளுங்கள் என்று மெத்தனமாக பதில் அளித்தனர்.
கோடை காலங்களிலும் பணியை தொடங்காமல் மழைக்காலம் துவங்கும் போது இப்பொழுது பணியை தொடங்கி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாக்குகின்றனர் இவ்வழியே முதன்மை சாலையை பயன்படுத்த மிகவும் சிரமமாய் இருக்கிறது. சாலை சரியில்லாததால் ஆம்புலன்ஸ் போன்றவை வருவதற்கு கூட மிகவும் சிக்கலாக இருக்கின்றது. இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்கு மிகவும் கடினமாய் இருக்கிறது.
மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை சரியான முறையில் வேலை செய்யாமல் வேலையை மழைகாலங்களில் துவங்கி மீண்டும் வேலையை கிடப்பில் போட பார்க்கின்றனர். கூடிய விரைவில் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுவதோடு விபத்து ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments