திருச்சி மேலப்புலிவார்ரோடு மற்றும் மரக்கடை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டுவந்த 69 கடைகளுக்கு வாடகையை செலுத்தவில்லை எனக்கூறி போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவு எனக்கூறி கடைகளை அகற்றிவந்தாலும் அதற்கான நகல்களை சமர்ப்பிக்காமலும் உரிய கால அவகாசம் வழங்கப்படாமல், போலீசாரை கொண்டு மிரட்டி கடை உரிமையாளர்களை மற்றும் ஊழியர்களை வெளியேற்றி கடைகளை சீல்வைக்கும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் அராஜகப் போக்கினால் போலீஸாருக்கும் கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், கடை உரிமையாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவிவருகிறது.
தொடர்ந்து ஆயுதபூஜை மற்றும் பண்டிகை தினங்கள் வரும் நிலையில் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments