திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நெல்லிப்பட்டியை சேர்ந்தவர்கள் நல்லமுத்து (வயது 55) – சியாமளா (வயது 52) தம்பதியினர். இருவரும் டிரஸ்ட் ஒன்று நடத்தி வருகின்றனர். டிரஸ்ட் மூலம் பலரிடம் இரிடியம் விற்பனை என்ற பெயரில் பலரையும் மோசடி செய்துவருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து
திருச்சி சிபிசிஐடி ஆய்வாளர் மோகன் தலைமையில் நான்கு காவலர்கள் மற்றும் டி. இடையபட்டி கிராம வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று காலை 3 மணி நேரத்திற்கும் மேலாக நல்லமுத்து வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நல்ல முத்து மற்றும் அவரது மனைவி சியாமளா இருவரையும் விசாரணைக்காக திருச்சி அழைத்துச் சென்றனர்.
மேலும் அதிகாரியிடம் விசாரித்த போது டிரஸ்ட் என்ற பெயரில் பலரும் இதில் ஏமாந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ஏமாந்தவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments