மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 ன் படி கழிப்பறைகள், வடிகால்கள், கழிவுநீர் குழாய்கள், செப்டிக் டாங்கிகள் போன்ற இடங்களில் மனிதக் கழிவுகளை கைகளால் சுத்தம் செய்வது குற்றமாக அறிவிக்கப்பட்ட நிலையிலும். திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களை, எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.
திருச்சி மாநகராட்சி 40 – வது வார்டில் நேற்று 22.09.2025 திருவரம்பூர் முத்துநகர், கார்மல் கார்டன் பகுதியில் இரண்டு தூய்மை பணியாளர்கள் ரவி (38), பிரபு (32) உயிர்கள் பறிபோகி இருக்கிறது.
சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு அமைப்புகளே, அதனை மீறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மக்களின் சுகாதாரத்தை காக்கக்கூடிய தூய்மை பணியாளர்களை நிரந்தரப் படுத்தி, அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கான பணிகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அவர்களை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து, அவர்களுடைய வாழ்க்கையை பின்னோக்கி இழுத்துச் செல்கிற நிலை, உழைப்பாளர்களை ஆண்டேக்களிடம் ஒப்படைக்கும் நிலையாகி விட்டது.
தமிழ்நாடு அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, 2023 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தலா 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களுடைய குடும்பத்தார்களில் யாருக்கேனும் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கிட வேண்டும்.
படித்திடும் குழந்தைகளாக இருந்தால் அவர்களின் படிப்புச் செலவையும் ஏற்று, அவர்களுக்கான அரசு வேலையை வழங்கிட வேண்டும்
எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பணியில் ஈடுபடச் செய்த ஒப்பந்ததாரரை கைது செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments