உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் மற்றும் ஸ்ரீ வண்ணமயில் சிட்ஸ் இணைந்து நடத்திய “தி ஹீலிங் ஹிட்டர்ஸ் லீக் 2025” டாக்டர்களுக்கான கிரிக்கெட் தொடர், ஜூலை 19 மற்றும் 20 தேதிகளில், உய்யகொண்டான் திருமலை பகுதியில் அமைந்துள்ள செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மருத்துவர். ராஜ்மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார்.திருச்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 மருத்துவர்கள், அணிகளாகப் பங்கேற்று தங்களது விளையாட்டு திறமைகளை உற்சாகமாக வெளிப்படுத்தினர்.
விளையாட்டு வழியாக மருத்துவர்களிடையே ஒற்றுமையை வளர்த்தும், வேலைப்பளுவிலிருந்து ஓர் ஓய்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய சிறப்பான முயற்சியாக இந்த தொடர் அமைந்தது.
ஆதரவாளர்கள்:
கேரேஜ் 45
இன்பினிட்டி கன்சல்டன்சி
இன்டர்நேஷனல் ஏர் எக்ஸ்பிரஸ்
பேப் டெக் வாட்டர் சலூஷன்ஸ்
ஹர்ஷ மித்ரா கேன்சர் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
பரிசுகள் வழங்குதல்:
சிறந்த அணிகள் மற்றும் தனிநபர் ஆட்டக்காரர்களுக்கான பரிசுகளை, ஹர்ஷ மித்ரா கேன்சர் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர். திருமதி சசிபிரியா அவர்கள் வழங்கினார்.
விழா ஒருங்கிணைப்பு:
இந்நிகழ்வை
திரு. பிரதிப்,
திரு. சத்தியராஜ்,
திரு. சந்தோஷ்,
திரு. பாண்டியன், திரு. ஆகாஷ் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
நிகழ்வின் நிறைவில், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் தலைவர் திரு. ஜோசப்ராஜ், செயலாளர் திரு. சுப்பிரமணியன் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தனர்.
Comments