திருச்சி உறையூர் பாத்திமா நகர் உள்ள காரை அம்மன் கோவிலின் அருகே சுமார் 7 அடி நீளத்தில் முதலை ஒன்று இருந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். முதலை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக கோரையாறு, உய்யக்கொண்டான் வாய்க்கால் போன்றவற்றில் அதிக அளவிலான வெள்ளம் வந்தது அப்போது இந்த முதலை வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காவல்துறையினர் சென்று பார்க்கும் பொழுது மீண்டும் தண்ணீருக்குள் முதலை சென்றுவிட்டது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீண்டும் முதலை தண்ணீரில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn



            
            
            
            
            
            
            
            
            
            


Comments