திருச்சி ஸ்ரீரங்கத்தில் 15 நிமிடத்திற்கு மேலாக பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்பொழுது மழையும் பெய்தது அதன் காரணமாக தற்பொழுது ஸ்ரீரங்கம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது கொள்ளிடம் செக்போஸ்ட் வடக்கு வாசல் பஞ்சகரை சாலையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவில் யானை நடை பயிலும் பகுதியில் காற்று வீசி மரம் சாய்ந்ததில் மின் கம்பி மீது மரம் விழுந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
உடனே அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தவுடன் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு தற்போது சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. காவல்துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments