திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி – சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி திருச்சி மாநகராட்சி உடன் மாநகராட்சிகள் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை இணைத்துள்ள நிலையில் லால்குடி அருகே அப்பாதுரை தாளக்குடி, வாளாடி ,நெருஞ்சலக்குடி ஆகிய ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்துள்ளனர்.
இதனை அறிந்த வாளாடி ஊராட்சி மக்கள் மாநகராட்சியுடன் வாளாடி ஊராட்சியை இணைத்தால் தொகுப்பு வீடுகள் மற்றும் அரசு மானியங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும், 100 நாள் வேலை திட்டம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் என உள்ளிட்டவைகளை வலியுறுத்தி திருச்சி – சிதம்பரம் சாலையான வாளாடி சிவன் கோவில் முன்பு உள்ள சாலையில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதனால் திருச்சி – சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகன் போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டாட்சியர் கூறியதாவது வார்டு இணைப்பு என்பது தற்காலிக உத்தேசம் தான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அரசு பரிசீலனை செய்து மாற்று நடவடிக்கை எடுக்கும். எனவே உங்களது கோரிக்கை மனுவாக கொடுங்கள் அரசுக்கு பரிந்துரை செய்கிறோம் என கூறியதன் அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
இதே போன்று திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி – திண்டுக்கல் சாலையில் கே.கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments