108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும்.

இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா (13.12.2023) அன்று தொடங்கியது. அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பகல் பத்து திருமொழித்திருநாள் ஐந்தாம் திருநாள் சௌரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய், சூர்ய-சந்திர வில்லை, நெற்றி சரம், கொண்டையில் முத்து பட்டை, கொண்டை அலங்கார குச்சம்,

அதில் சிறு தொங்கல் பதக்கம் அணிந்து திருமாலை பாசுரங்களுக்காக ஆபரண அரசாக விளங்கும் திருவரங்க விமான பதக்கம், சிகப்பு கல் அடுக்கு பதக்கங்கள், 2 வட முத்து மாலை, காசு மாலை, சிகப்புக்கல் அபய ஹஸ்தம், பின் சேவையாக – ‘அரை சிவந்த ஆடை’ என்ற பாசுரப்படி சிவப்பு பட்டு உடுத்தி அர்ஜுன மண்டபத்தில் சேவை சாதிக்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments