தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை திருச்சி மாவட்ட சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (05.01.2022) காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்க மஹாலில் நடைபெறுகிறது.
இதில் திருச்சியில் முதன்முறையாக சிறு தானிய உணவுகளின் வகைகளும் அதன் மருத்துவ பயன்களும் காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்த சிறு தானிய உணவு திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு உணவு பாதுகாப்புத்துறை திருச்சி மாவட்டம் நியமன அலுவலர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments