2009-ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் 1969 (2023ல் திருத்தப்பட்டது) மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகள் 2025-ன் படி, பிறப்பு நிகழ்வு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்கு குழந்தையின் பெயர் எவ்வித கட்டணமும் இல்லாமல் பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்துகொள்ளலாம்.
12மாதங்களுக்கு மேல் 15 ஆண்டுகள் வரை ரூ.200/- கால தாமத கட்டணம் செலுத்தி பிறப்பு பதிவேட்டில் குழந்தை பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.
2009-ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான கால அவகாசம் 31-12-2024-இல் முடிவடைந்த நிலையில்,
தற்போது பிறப்பு பதிவு செய்து 15 ஆண்டுகள் மேல் ஆகியும், பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு, பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் பெயர் பதிவு செய்து குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ள கால அவகாசம் 26.09.2026 வரை வழங்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பெயரில்லா பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இதுவே கடைசி வாய்ப்பு என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த கால அவகாசத்தை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments