லால்குடியில் செயல்பட்டுவரும் நீதிமன்றம் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் எந்தஒரு அடிப்படை வசதிகளின்றி இயங்கிவருவதால், புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு இடம் ஒதுக்கி, புதிய நீதிமன்றம் கட்டிட மௌனம்சாதித்துவருகிறது. இதனால் லால்குடியில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள், பொதுமக்கள் மிகுந்த சொல்லமுடியாத துயரத்தை சந்தித்துவருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்தவாரம் லால்குடி வழக்கறிஞர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டநிலையில், புதிய கட்டிடம் கட்டித்தர உறுதியளித்து தற்போதுவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு இதற்கான அறிவிப்பு வெளியிடாதபட்சத்தில் வழக்கறிஞர்கள் நலனில் அக்கறையில்லாத தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்தும், லால்குடியில் புதிய நீதிமன்றம் கட்டிட வலியுறுத்தி திருச்சிராப்பள்ளி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலிருந்து திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் 350க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பியதுதான் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
லால்குடியில் புதிதாக பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டநிலையில் நீதிமன்றத்திற்கு மட்டும் புதியகட்டடம் கட்ட மறுப்பது ஏனோ என்று தெரியவில்லை என்றும், அரசு தொடர்ந்து காலதாமதம் செய்தால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments