நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்த நிலையில்
திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி ரத்தினவேல் வளர்சி நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையில் உள்ள பெயர் பலகை மற்றும் அதில் உள்ள அதிமுக அரசின் சாதனை விளக்க படங்கள் மறைக்கப்படாமல் உள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் முன்னாள் அதிமுக கட்சி எம்பி ரத்தினவேலு உள்ளூர் வளர்ச்சி நிதியில் கடந்த 2017 மற்றும் 2018 ஆம் நிதி ஆண்டில் ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
அந்த பயணியர் நிழல் குடையில் முன்னாள் எம்பி ரத்தினவேலின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மேலும் நிழற்குடையில் அதிமுக அரசின் சாதனை விளக்க படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் தேர்தல் விதி அமலுக்கு வந்த நிலையில் பொது இடத்தில் ஒரு அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்கள் படங்கள் இருப்பது தவறானதாகும்.

இந்த நிலையில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்து பல நாட்கள் ஆன நிலையில் இன்னும் அது அப்படியே உள்ளது எனவே தேர்தல் அலுவலர்கள் அதனை மறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….






Comments