கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும், இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சந்தோஷ் குமார் கண்டன உரையாற்றினார். மாணவர் மாவட்ட செயலாளர் கணேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் குமார், தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தொழிற்சங்க பேரவை திருப்பதி, அவைத்தலைவர், ஜெயராமன், அர்ஜுனன், முருகேசன், ப்ரீத்தா விஜய் ஆனந்த், மில்டன் குமார், குமாரவேல் , காளியப்பன், ராஜ்குமார், ஐயப்பன், லோகராஜ், வெங்கடேசன், மணிகண்டன், பிரியா சாந்தி மற்றும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments