ஆட்சியர் அலுவலகத்தில் மக்களுக்கு அனுமதி மறுப்பு- நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்ட புகார் பெட்டியில் மனுக்களை போட்டு சென்ற மக்கள்!!
கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துவரும் சூழலிலும், திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் என மனு கொடுக்க வரும் மக்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாததால், வரும் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையின் பல்வேறு இடங்களில் மனு கொடுக்க வந்தவர்கள் கைக்குழந்தையுடன் மரத்தடி நிழலிலும் அமர்ந்திருந்தனர்.
இத்தகைய அசாதாரண போக்கினை தவிர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பெட்டியானது மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் கதவு முன்பு வைக்கப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து மக்கள் அனைவரும் நுழைவாயில் அருகில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் மனுக்களை அங்கிருந்து சேகரித்து சென்றனர்.
மக்களின் கூட்டம் அதிகரித்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட தோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மனுக்கள் பெறவும் வழிவகை செய்து தரப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP