பணம் என்றால் பிணமும் வாயை திறந்து பார்க்கும் காலம் இது, எல்ஐசியின் கன்யாடன் பாலிசி, மகளுக்குப் பெரும் நிதியைக் குவிப்பதோடு, வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80சியின் கீழ் வருகிறது, எனவே பிரீமியம் செலுத்துபவர்கள் ரூபாய் 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. அவை பெரும் நிதியை குவிக்க உதவுகின்றன.

எல்ஐசி குறிப்பாக பெண்மகள்களுக்காக பல திட்டங்களை வகுத்துள்ளது. இது பெண் கல்வி முதல் திருமணம் வரையிலான உங்களின் வருங்கால அச்சத்தை நீக்குகிறது. பொதுவாக இந்தியாவில் பெண் குழந்தை பிறந்தவுடனே அவளது படிப்பு, திருமணம் பற்றி கவலைப்படத் தொடங்குவார்கள் மக்கள், இந்த பட்டியலில் நீங்களும் இருந்தால், எல்ஐசி கன்யாடன் பாலிசி இந்த கவலையை போக்குகிறது, இது உங்கள் மகளின் திருமணத்தில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்த விடாது. அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்…

எல்ஐசி கன்யாடன் பாலிசி உங்கள் மகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், திருமணத்தில் பண நெருக்கடியிலிருந்தும் அவளை விடுவிக்க முடியும். இந்தத் திட்டத்தின் பெயரின்படி, பெண் திருமணம் செய்து கொள்ளும்போது பெரிய நிதியை அவளுக்காக வழங்க முடியும். இதில் நீங்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 121 டெபாசிட் செய்ய வேண்டும் அதாவது ஒவ்வொரு மாதமும் மொத்தம் ரூபாய் 3,600 டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்த முதலீட்டின் மூலம், 25 வருட பாலிசியின் முதிர்வுக் காலம் முடிந்தவுடன், மொத்தமாக ரூபாய் 27 லட்சத்தைப் பெறுவீர்கள்., எல்ஐசியின் இந்த சிறந்த பாலிசியை 13 முதல் 25 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். ஒருபுறம், ஒரு நாளைக்கு ரூபாய் 121 சேமிப்பதன் மூலம், உங்கள் மகளுக்கு ரூபாய் 27 லட்சம் திரட்டலாம், மறுபுறம், இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், ஒரு நாளைக்கு ரூபாய் 75 மட்டுமே, அதாவது மாதத்திற்கு சுமார் ரூபாய் 2250, முதிர்ச்சியின் போது நீங்கள் கூடுதலாக 14 லட்சம் பெறுவீர்கள். நீங்கள் முதலீட்டுத் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பினால், உங்கள் விருப்பப்படி அதை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம், அதே அடிப்படையில் உங்கள் நிதியும் மாறும்.

மகளுக்காகத் துவங்கப்பட்ட இத்திட்டத்தைப் பெறுவதற்கான வயது வரம்பு பயனாளியின் தந்தையின் வயது குறைந்தபட்சம் 30 ஆகவும், மகளின் வயது குறைந்தது ஒரு வருடமாகவும் இருக்க வேண்டும். இந்த எல்ஐசி திட்டத்தில் பெரும் நிதியை குவிப்பதோடு, வரிச் சலுகைகளும் கிடைக்கும். எல்ஐசி கன்யாடன் பாலிசி வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80Cன் கீழ் வருகிறது, எனவே பிரீமியம் வைப்பாளர்கள் ரூபாய் 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம்.

எல்ஐசியின் கன்யாடான் பாலிசியை எடுக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா, இதில் உங்கள் ஆதார் அட்டை அல்லது வேறு ஏதேனும் அடையாளச் சான்று, வருமானச் சான்றிதழ், குடியிருப்புச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மகளின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
வளமான வாழ்க்கைக்கு சேமிப்பு மிகவும் நல்லது !

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           6
6                           
 
 
 
 
 
 
 
 

 30 March, 2024
 30 March, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments