நாளை (28.01.2025) செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணியளவில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு துனை முதலமைச்சருமான உதயநிதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்து மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா ஜாம்புரி தேசிய திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி துவக்க விழா,
இலங்கை மறு வாழ்வு மைய முகாமில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளவும் உள்ளார்கள். எனவே அவரை வரவேற்க விமான நிலையத்தில் மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,
அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments