திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தனியார் விடுதியில் ஐந்தாவது மாடியில் செயல்பட்டு வந்த ஸ்பாவில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

சோதனையில் முடிவில் மூன்று பெண்களை மீட்டு ஸ்பா மேலாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் உள்ள ஸ்பாவில் அதிரடி சோதனை நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய ப்ரியா உத்தரவிட்டார்.
இதனையெடுத்து திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் நேரடியாக சோதனை நடத்தினார். மேலும் அந்த ஸ்பாவில் உள்ளவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் இல்லை என்றால் காவல்துறை அதிகாரிகள் ஸ்பா உள்ளே உள்ள பொருட்களை அகற்றுவார்கள் என உரிமையாளரிடம் எச்சரிக்கையுடன் தெரிவித்து விட்டு சென்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments