திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் தொமுச தொழிற்சங்கம் சார்பில் நடந்த வாயிற் கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி அவதூறாக பேசியதோடு கையில் குஞ்சம் வைத்த கயிறு கட்டுபவர்கள் கையை வெட்டுங்கள் என கூறிய பெல் தொமுச துணைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் பெல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் திருவெறும்பூர் அருகே உள்ளது. இந்த நிறுவனத்தில் பகுதி இரண்டில் கடந்த 14ஆம் தேதி தொமுச (திமுக) தொழிற்சங்கம் சார்பில் வாயில் கூட்டம் நடந்தது. அந்த வாயில் கூட்டத்தில் தொமுச தொழிற்சங்க துணைச் செயலாளர் பரமேஸ்வரன் என்பவர் கலந்து கொண்டு பாரத பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் குறித்து அவதூறாக பேசியதோடு கையில்குஞ்சம் வைத்த கயிரை கட்டுபவர்களின் கையை வெட்டுங்கள் என வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக தொமுத தொழிற்சங்க துணைச் செயலாளர் பரமேஷ்வரன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்வதுடன் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி திருவெறும்பூர் வடக்கு மண்டல தலைவர் செந்தில்குமார், துவாக்குடி மண்டல் தலைவர் ராஜராஜன் ஆகியோர் தலைமையில் பெல் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments