தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊர்களிலிருந்தும் அவரவர் ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு தேவையான சிறப்பு பேருந்துகள் தினசரி இயக்கப்பட உள்ளது. அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையம் – சென்னை 150 சிறப்பு பேருந்துகளும், அரியலூர்/ஜெயங்கொண்டம் – சென்னை 50 சிறப்பு பேருந்துகளும், துறையூர்/பெரம்பலூர் – சென்னை 20 சிறப்பு பேருந்துகளும்,
திருச்சி மத்திய பேருந்து நிலையம் – மதுரை 50 சிறப்பு பேருந்துகளும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் – கோவை 20 சிறப்பு பேருந்துகளும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் – திருப்பூர் 20 சிறப்பு பேருந்துகளும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் – திண்டுக்கல்/பழனி 25 சிறப்பு பேருந்துகளும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் – தஞ்சாவூர் 50 சிறப்பு பேருந்துகளும்,
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அரியலூர்/ஜெயங்கொண்டம் 50 சிறப்பு பேருந்துகளும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் – பெரம்பலூர் 25 சிறப்பு பேருந்துகளும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் – துறையூர் 25 சிறப்பு பேருந்துகளும், என மொத்தம் : 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் tnstc.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் டிக்கெட் ரிசர்வேசன் சிஸ்டம் மூலம், முன்பதிவு செய்து பயணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் குழந்தைகளையும், உடைமைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments