திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் இல்லம் உள்ளது. இல்லத்திற்கு முன்னதாக 50க்கும் மேற்பட்ட கணினி பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 60,000 கணினி பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த மே மாதம் 29ஆம் தேதி கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் பத்தாவது 12ஆவது படித்தவர்களும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதி உள்ளனர்.

மத்திய அரசு குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் இந்த பதவியில் கம்ப்யூட்டர் இன்ஸ்டக்டர், ஆபரேட்டர் என்பதே உள்ளது. அதில் பிஎட் கணினி படித்தவர்களுக்கே வேலை வாய்ப்பு தகுதி பெறுவார்கள். இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ளவர்களை தேர்வு எழுத வைத்திருப்பது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முறையான எந்த அறிவிப்பும் இல்லாமல் தேர்வு நடத்துவதை அவர்களுக்கு அறிவிக்காமல் இந்த தேர்வு நடைபெற்று உள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் சந்தித்து தங்களுக்கே வேலைவாய்ப்பு நியமனம் செய்ய வேண்டுமெனவும், தேர்வு எழுதாத கணினி பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வீட்டில் முன் குடும்பத்துடன் அமர்ந்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 08 June, 2024
 08 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments