Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா – நினைவு பரிசு, அஞ்சல் அட்டை வெளியீடு

பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் கடந்த (28.01.2025) தொடக்க விழாவானது கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நிறைவு விழா நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

அதன் தொடர்ச்சியாக இன்று வைர விழா Jamboree – 2025 விழாவின் இறுதி நிகழ்வில் அணி தலைவர்களுக்கும், மாநிலங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நினைவு பரிசு வழங்கினார்.

இவ்விழாவின் Chief Commissioner scout wing, Chief Commissioner Guide wing, Overall performance Chambionship of this event ஆகிய விருதுகளை ராஜஸ்தான் மாநிலம் வென்றுள்ளது. அம்மாநில அணி தலைவர்களிடம் விருதுகளை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். 

Jubilee Jamboree-2025 விழாவின் இறுதி நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விழாவின் நினைவாக அஞ்சல் அட்டை வெளியிட்டு சிறப்பித்தார். அடுத்த ஜாம்பூரி நிகழ்வானது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறுவதால் அதற்கான ஜோதியை அம்மாநில சாரணர் – சாரணியரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *