நேற்று இலால்குடி ஒன்றியம்,எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நாட்குறிப்பு கையேடு (DIARY) முன்னாள் மாணவரும், ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவருமான Rtn சு.சரவணன் அவர்களின் நிதி உதவியால்,
இலால்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.து. சாந்தி அவர்கள் வழங்கினார்.திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான் சுரேஷ், ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கத்தின் இன்னாள் தலைவர் லோகேஸ்வரன், இலால்குடி திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் திரு. இராமகிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி திருமதி காயத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக காமராசரின் பிறந்த நாள் விழாவான கல்வி வளர்ச்சி நாள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமை ஆசிரியர் திருமாவளவன் வரவேற்றார்.இந்நிகழ்வில் பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளைப் பாராட்டினர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments