பிரச்சனை செய்ய வந்தீர்களா ஏன் இவ்வளவு கூட்டம் ஏன் DC கோபம்- கவுன்சிலர் அடிப்பீங்களா அடிச்சு பாருங்க பரபரப்பு வாக்குவாதம்
திருச்சி மாநகர் எடமலைபட்டிபுதூர் 57வது வார்டு நல்ல கேணி தெருவில் அரசு ஓய்வு பெற்ற அலுவலர் முத்தையன். இவர் இரண்டு மகளுடன் தனது 9 சென்ட் நிலத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இந்த தெருவில் பாதை இல்லாத பொழுது தங்களுடன் நிலத்தில் இருந்து பாதை கொடுத்ததாக கூறுகிறார்கள்.
இவர் வீட்டிற்கு எதிர்ப்புறம் கட்டி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்ற ஆணை வந்துள்ளது. இதனால் 57வது வார்டு திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம் தொடர்ந்து தங்களை மிரட்டுவதாக முத்தையனின் மகள் கிருத்திகா தேவி குறிப்பிட்டார்.
இந்த மாதம் 28ஆம் தேதி பூட்டி இருந்த வீட்டின் முன் சிறிய இரும்பு கதவை பிடித்து பிடுங்கி எறிய முற்பட்டார். மேலும் இந்த சம்பவத்தின் போது இரு தரப்பினரும் ஆபாச வார்த்தைகளில் பேசிக்கொண்டனர். மாமன்ற உறுப்பினரும் ஆபாச வார்த்தைகளில் பேசி இவர்களை அடிக்க முற்பட்ட காட்சிகளும் வெளியானது. சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திகள் ஒளிபரப்பானது.
தன்னை தரக்குறைவாக பேசி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை அவர் வெளியிட்டதற்க்கு கண்டனம் தெரிவித்துஇன்று(22.04.2025) திடீரென திருச்சி மாநகராட்சி 57வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு 25க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் தனது வார்டு மக்களை அழைத்து வந்து திடீரென திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.போக்குவரத்து இதனால் பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் முத்து செல்வத்திடம் கடுமையாக பேசினார்.
என்னிடம் இது தொடர்பாக சொல்லி இருக்கலாமே.எதற்காக இவ்வளவு கூட்டத்தை கூட்டி வந்தீர்கள் பிரச்சனை செய்வதற்காக என்று முத்து செல்வத்திடம் கேள்வி எழுப்பிய பொழுது மாநகர காவல் ஆணையரை பார்க்க வந்தேன்.பார்க்க வந்ததற்கு ஏன் இவ்வளவு பேரை அழைத்து வருவாங்களா என கோபத்துடன் கேள்வி எழுப்பினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் ஸ்ரீதர் தலையிட்டு சமாதானப்படுத்தி முத்து செல்வத்தை தனியாக அழைத்துச் சென்றார். மாநகர காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் கடும் கோபத்தில் இருந்தார். பிறகு பொதுமக்களை காவல்துறையினர் பேசி அங்கிருந்து போராட்டத்தை கலை செய்தனர் இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் பிரதான வாயில் பூட்டப்பட்டு இருந்தது சிறிது நேரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
திராவிட மாடல அரசையும் முதல்வரையும் பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக குறிப்பிட்டுஎன்னை பற்றி தற்குறி ஊடகங்கள் செய்தி வெளியிட்டது இதனால் தன்னை பற்றி செய்தி வெளியான நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் இடம் மனு கொடுக்க தனது வார்டு மக்களுடன் வந்ததாக கவுன்சிலர் முத்துச்செல்வம் குறிப்பிட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments