சீமான் மீது அடுத்த புகார் நீதிமன்றத்தில் டிஐஜி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் – பரபரப்பு
கடந்த ஏழாம் தேதி (08.04.2025)சீமான் நீதிமன்றத்தில் ஆஜான பொழுது ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் டிஐஜி வருண்குமார் காரை சுற்றி வளைத்து வாகனங்களை நிறுத்தி அவரை மிரட்டல் தொணியில் அங்கும் இங்குமாக அவருக்கு எதிரே வந்ததாகவும் அவர் டிஐஜி நீதிமன்றத்தில் ஆஜராகி வெளியே வந்த பொழுது ராமஜெயம் வழக்கு என்ன ஆச்சு என
பல்வேறு கோஷங்களை அவருக்கு முன் எழுப்பினர். இது தொடர்பாக இன்று மாலை டிஐஜி வருண்குமார் சீமான் மீது மேலும் ஒரு புகார் மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
அன்று ஆஜரான பொழுது ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர். காவல்துறையில் உயர்வு பதவியில் இருக்கும் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி வெளியே வரும்போது இது போன்ற செயல்களில் கட்சி ஈடுபட்டது தொடர்பாக உடனடியாக அதற்கு சட்ட நடவடிக்கை சீமான் மீது எடுக்க இந்த மனதில் குறிப்பிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments