திருச்சி டிஐஜி அருண்குமார் நேற்று இரவு பாவை பவுண்டேஷன் எனும் அமைப்பு நடத்தும் குழந்தைகள் விடுதியில் அறையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் .பின்னர் அங்கிருந்த 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மத்தியில் பேசும் போது….. தந்தை பெரியார் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கிருக்கும் அனைவர் பெயரையும் குறிப்பிடாமல் அனைவருக்கும் வணக்கம் என் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட வார்த்தை தான் அகிராசனா என்பது.
இந்த பாவை பவுண்டேஷன் விழாவிற்கு வருவதில் நான் பெருமை அடைகிறேன். குழந்தைகள் எனக்கு பூ அளித்தது என் நெஞ்சிற்கு இதமாக இருந்தது.படிப்பினால் மட்டும்தான் இந்த சமுதாயத்தில் நான் தலை நிமிர்ந்து நடக்கின்றேன். நான் மட்டுமல்ல இங்கு வந்திருக்கும் பெண் போலீசும் அதே போல் படிப்பினால் முன்னேறியவர்கள் தான். கௌரவமான சம்பளம், கௌரவமான வேலை, குடும்பத்தில் நல்ல மரியாதை இவை அனைத்தும் அரசாங்க வேலைக்கு செல்வதனால் கிடைக்கிறது.
இங்கு இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என நினைக்கிறீர்கள் எனாறார். பலர் என்சிசி போன்ற அமைப்புகளில் இருப்பீர்கள் . பூக்களில் ஏழு பருவங்கள் உள்ளது அது போல் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பல்வேறு நிலைகளில் மாணவர்கள் இங்கு உள்ளனர். வாழ்க்கையில் முதல் பாதி யார் கஷ்டப்பட்டு உழைத்து நேர்மையுடன் படித்து முன்னேறி வருகிறார்கள் அவர்களின் இரண்டாவது பாதி வாழ்க்கை நன்றாக இருக்கும் முதல் பாதி வாழ்க்கையில் யார் சோம்பேறியாக எந்த திறமையும் வெளிப்படுத்தாமல் உள்ளார்களோ அவர்களது இரண்டாவது பாதை வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாக இருக்கும் அதனால் நீங்கள் உங்கள் சிரமங்களை கண்டு கொள்ளாமல் நன்கு படிக்க வேண்டும் என்றார்.நான் ஐபிஎஸ் ஆனேன் முதல் பாதி வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தேன் ஆனால் தற்பொழுது எந்த கஷ்டத்தையும் நான் அனுபவிக்கவில்லை படிப்பு மட்டுமே முக்கியம் என்றார்.
கை தட்டுவதுடன் நிறுத்தி விடாமல் நீங்கள் நன்கு படிக்க வேண்டும். படிப்பு மட்டும்தான் என்னை இந்த இடத்தில் உட்கார வைத்தது அதுபோல் தானும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும்.தமிழில் ஒரு பழமொழி உண்டு.முருங்கையை நட்டவன் வெறும் கையுடன் போவான் என்று…. அதற்கு அர்த்தம் என்னவென்றால் கையில் காசு இல்லாமல் ஓட்டாண்டியாக பிச்சைக்காரனாக போய்விடுவான் என அர்த்தம் கிடையாது.முருங்கையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அனைத்து விஷயங்களும் உள்ளது. முருங்கையை சாப்பிட்டு வளர்பவன் தன்னுடைய கடைசி காலத்தில் குச்சியை ஊன்றி நடக்காமல் ஆரோக்கியமாக உயிரை விடுவான் என்பது தான் அதன் அர்த்தம்.
வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும் இரண்டு விஷயங்கள் அந்த கஷ்டத்தை எடுத்து விடும். ஒன்று நண்பர்கள் இரண்டாவது பணம். பணக்காரனுக்கும் கஷ்டம் உண்டு ஏழைக்கும் கஷ்டம் உண்டு பணம் இருந்தால் பலம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கு படிப்பு தேவை நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள் நல்ல படிப்பை படியுங்கள். விளையாட்டில் நீங்கள் அனைவரும் மிக ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என கேள்விப்பட்டேன் உங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை நான் வாங்கித் தருகின்றேன் என டி ஐ ஜி வருண்குமார் உறுதி அளித்தார்.
சினிமா பார்ப்பீர்களா…. யாருக்கு கார் பிடிக்கும் என்றார்…கார் ரேஸ் படம் வந்துள்ளது தெரியுமா என்றார் அதற்கு குழந்தைகள் குருவி என்றும் அஜீத்குமார் கார் ரேஸ் ஓட்டுவார் என கூறினர். இதனால் டி ஐ ஜி வருண்குமார் சற்று அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட டிஐஜி வருண்குமார் .. முக்கியமான விஷயம் சொல்கிறேன் கேளுங்கள்… நான் என் வாழ்க்கையில் எனக்கு என்ன தேவையோ .. … அனைத்து திரைப்படங்களையும் பார்க்க மாட்டேன் எந்த திரைப்படத்தில் எனக்குப் பிடித்த அம்சங்கள் இருக்கிறதோ அந்த திரைப்படங்களை மட்டும் தான் நான் பார்ப்பேன் என்றார்.
நான் குறிப்பிடும் எப்1 என்கின்ற இந்த கார் ரேஸ் படம் வாழ்வதற்கு வீடு கூட இல்லாத ஒருவன் எப்படி கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு கஷ்டப்பட்டு உழைத்து தனது மூளையை பயன்படுத்தி நேர்மையாக இருந்து வெற்றி அடைகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த திரைப்படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போது அவர்கள் அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறினார்கள் இந்த திரைப்படத்தை பார்க்க விருப்பமுள்ளவர்கள் அனைவரையும் நான் இன்று மாலை அந்த திரைப்படத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன் என உறுதி அளித்தார்.
வாழ்க்கையில் நான் கூறிய விஷயங்களை மறக்காதீர்கள் சகதியில் மாற்றிக் கொண்டால் போராடி வெளியே வர முயற்சி செய்யக் கூடாது மூளையை பயன்படுத்தி உடலை மெலிதாக்கி மூழ்காமல் மேலே வர வேண்டும் அதுபோல் வாழ்க்கையில் சிரமமான சூழ்நிலைகளில் நீங்கள் மூளையை பயன்படுத்தி நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள் வாழ்த்துக்கள் என்றார். பின்னர் இரண்டு மாணவர்கள் டிஐஜி வருண்குமாரின் உருவத்தை வரைந்து அவருக்கு பரிசளித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments