Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பாடநூல் நிறுவன தலைவர் பதவியிலிருந்து திண்டுக்கல் ஐ.லியோனியை நீக்க வேண்டும் – ABVP தென் தமிழக மாநில செயலாளர் அறிக்கை

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா வெளியிடுள்ள அறிக்கையில்.. மாணவர்கள் வாழ்க்கை முன்னேற அவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் “கல்வி” அப்படிப்பட்ட ஆயுதத்தை உடைக்கக் கூடிய செயல்தான் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றிருப்பது தமிழ்நாட்டிற்கே ஒரு மிகப்பெரிய அவமானம். பாடநூல் நிறுவனத்தின் பணி, அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். இப்பணியில் திண்டுக்கல் லியோனியை தலைவராக தேர்ந்தெடுத்திருப்பது அந்த பணிக்கே கேவலம். 

திமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஐ.லியோனி பட்டிமன்ற ஆபாச பேச்சாளர் மட்டுமின்றி பொது வெளியில் பெண்களை இழிவாகவும் பேசுபவர். பெண்களின் உடல் அமைப்பு குறித்து முகம் சுளிக்கும் வகையில் இழிவாகவும், கொச்சையாகவும் பேசுபவருக்கு இப்படிப்பட்ட ஒரு பொறுப்பு வழங்கியிருப்பதை ABVP வன்மையாக கண்டிக்கிறது. பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர் சந்திப்பில் பள்ளியில் அவர் மாணவர்களுக்கு பாடம் நகைச்சுவையாக எடுப்பேன் என்று உதாரணத்தோடு கூறியபோது அதில் Force = mass× velocity, F=mv என்று கூறினார். 32 ஆண்டு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த அவருக்கு நியூட்டனின் விதிகள்  F=ma என்று கூட தெரியாமல் இருப்பது தான் மிகப் பெரிய கேவலம். இவர் அச்சிட போகும் புத்தகங்களை படிக்கப் போகும் எதிர்கால சந்ததியின் நிலை என்னவாகும்? என்று நினைக்கும் போது தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

ஏற்கனவே பாடப்புத்தகங்களில் பெரியார் பற்றிய பல பொய்யான போலி வரலாற்றுக் கதைகள் உள்ளது. இதில் ஐ.லியோனி கருணாநிதி பற்றி பாட புத்தகங்களில் சேர்க்க உள்ளோம் என்று கூறி இருப்பது திராவிட சிந்தனையை மாணவர்களுக்கு திணிக்க உள்ளதை காட்டுகிறது. ஏற்கனவே TNPSC   போன்ற போட்டித் தேர்வுகளில் திராவிட சிந்தனை கொண்ட கேள்விகள் அதிகமாக இடம் பெறுகின்றன. தமிழகத்தின் வரலாற்றினை அழித்து திராவிட சிந்தனை திணிப்பு என்பதை ABVP தேசிய மாணவர் அமைப்பு ஒருபோதும் அனுமதிக்காது. திமுக ஒன்றிய அரசு என்றும் ஜெய்ஹிந்த் சொல்லாததால் தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது என்றும் கூறிவருகிறது. 

இதுபோன்ற தொடர்ந்து தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு தமிழகத்தை தலைகுனிய வைக்கும் செயல்களிலும், மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடாமலும் இருக்க திமுக வை ABVP எச்சரிக்கிறது. ஆகவே பாடநூல் நிறுவன தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து திண்டுக்கல்
ஐ.லியோனியை நீக்கிவிட்டு தகுதியான கல்வியாளர் ஒருவரை தமிழக அரசு உடனடியாக அமர்த்த வேண்டும்
என்று ABVP வலியுறுத்துகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *