மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது தமிழ்நாட்டில்,
75 விழுக்காட்டிற்கு குறைவான மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.1500,
அதற்கு மேற்பட்டோருக்கு ரூ.2000 மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ரூ.6000 முதல் ரூ.15000 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில்
மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், நாட்டிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான முறையான கணக்கெடுப்பு நடத்தி, அண்டை மாநிலங்களில் வழங்கப்படும் போல இங்கும் உயர்ந்த தொகை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments