திருச்சி மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர், பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சேவா அறக்கட்டளை இணைந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் ’பேரிடர் மேலாண்மை ‘குறித்த பயிற்சி முகாமினை 31.01.2026 அன்று சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடத்தியது.
இப்பயிற்சி முகாமிற்கு ஸ்ரீ சத்ய சாய் சேவா பேரிடர் மீட்புக்குழுவின் மாநில பயிற்சியாளர் திரு.சுரேஷ் அவர்கள் தலைமை வகித்தார். அவருடன் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர்கள் கலைமணிகண்டன், பிரகாஷ் ராஜ், செல்வி.பிரீத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் செயலர் ரவீந்திரன், கல்லூரியின் முதல்வர் D.வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சி முகாமில் மாணவர்கள் பேரிடர் மீட்புப்பணியில் ஈடுபடும் வகையில் இதுவரை நம் நாட்டில் ஏற்பட்ட பேரிடர்களைப் பற்றியும் அதற்கு செய்யப்பட்ட மீட்புப் பணிகள் குறித்தும் விளக்கினர்.
மேலும் பூகம்பம், சுனாமி, வெள்ளப் பெருக்கு, புயல், நிலச்சரிவு ஆகியன நிகழ்வதற்கான காரணங்களையும் அதனை எதிர் கொள்வதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர். குறிப்பாக பேரிடரின் போது இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை எவ்வாறு மீட்பது போன்ற செயல்முறை விளக்கங்கள் செய்யப்பட்டன. மீட்புப் பணிக்கு தேவையான ரீஃப் முடிச்சு, ஒற்றை வளைவு முடிச்சு, இரட்டை வளைவு முடிச்சு, கிளவ் கிட்ச் முடிச்சு, பௌலைன் முடிச்சு,
பயர்மேன் சேர் முடிச்சு மற்றும் டிராகிட்ச் போன்ற 9 வகையான முடிச்சுகளை உபயோகிக்கும் முறை ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டன.
தீ விபத்து ஏற்படும் போது செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விபத்துகள் ஏற்படும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்த பயிற்சியும் மாணவர்களுக்கு செய்து காட்டினர்.
இப்பயிற்சி முகாமானது தங்களுக்கு புதியதோர் உத்வேகத்தை அளித்ததாகவும் பேரிடர் ஏற்பட்டால்
தங்களால் மக்களை மீட்டு உதவி செய்ய இயலும் எனவும் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறினர்.
பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை சுாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் அவர்கள் செய்திருந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments